அரியலூர்: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமையன்று லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்தது.
ஆண்டுதோறும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் 20 முதல் 25ஆம் தேதிவரை இவ்வாறு நிகழ்வதாகக் குறிப்பிட்ட பக்தர்கள், இம்முறை லிங்கத்தின் மீது பத்து நிமிடங்கள் மட்டுமே சூரிய ஒளி படுவதைக் காண முடிந்தது என்றனர்.
இந்த அரிய காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம்.