ஆற்றில் இறங்கும் கள்ளழகர்:2,400 பேருக்கு சிறப்பு அனுமதி

1 mins read
25e78aea-41af-4738-beb5-fc578a2f7931
கள்ளழகர் மதுரை மாநகருக்கு வந்துள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

மதுரை: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க 2,400 முக்கிய விருந்தினர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் என அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

இது குறித்த ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி கள்ளழகர் வைகையில் இறங்கும் இடத்தில் விஐபிகளுக்கு 2,400 பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும்,” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்