சிதம்பரம் நடராஜர் கோயில் குதிரை மரணம்

சிதம்பரம் நடராஜர் கோயில் குதிரை மரணம்

1 mins read
97782192-aad0-43c1-897c-68251fa3f802
குதிரை ராஜா இறந்துவிட்டது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சிதம்பரம்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இறைபணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குதிரை ராஜா உடல் சுகவீனத்தால் மரணமடைந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயில் அசுவ பூஜைக்காக சென்னை பக்தர் செல்வராஜு குதிரை ஒன்றை அளித்திருந்தார்.

ராஜா என்று அழைக்கப்பட்ட அந்த குதிரை கடந்த நான்கு வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த நான்கு நாட்களாக உடல் நலம் குன்றிய குதிரை ராஜாவுக்கு கால்நடை மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த குதிரை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தது.

குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் முறைப்படி மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சித்தர்களும் மலர் அஞ்சலி மற்றும் மத சடங்குகள் செய்யப்பட்டு அந்த குதிரை ராஜா ருத்ர பூமி என்கின்ற மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் உ.வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
கோயில்