மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டு சிறை

சிவகங்கை: ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கிராம ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கடந்த 2015ஆம் ஆண்டு முருகன் (51வயது) என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

அப்போது ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவிகள் ஆறு பேருக்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து மாணவிகளின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை ஆசிரியர் முருகனை கைது செய்ய உத்தரவிட்டார்.

முருகன் மீது போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச்சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவானது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்கு என தனியாக 47 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!