தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 mins read
d274d0a0-adca-4d1b-a9cf-ed4df09546b5
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது ‘கோவிந்தா கோவிந்தா’ எனும் முழக்கம் ஒலித்தது. - படம்: ஊடகம்

மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு மதுரையில் கோலாகலமாக நடந்தேறியது.

செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளியதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிகழ்வை நேரில் காண அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மதுரையில் கூடினர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது பக்தர்கள் பல்வேறு பாடல்களைப் பாடியும் ஆடியும் வழிபட்டனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது.

இதனால் ஒட்டுமொத்த மதுரை மாநகரமும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

இதன் காரணமாக, மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான காவலர்கள் தீவிர கண்காணிப்பு, சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்