தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
33f4f4d3-c228-450c-8cef-6f5302e5f0f8
சென்னை புதிய விமான நிலையம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.11 கோடி எனத் தெரிய வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று தோகா நகரில் இருந்து சென்னை வந்த பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது 11 கிலோ எடை உள்ள ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.11 கோடி எனக் கூறப்படுகிறது. இதைக்கடத்தி வந்த இளையரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்