துப்பாக்கித் தோட்டாவுடன் விமானப் பயணம்: அமெரிக்கரிடம் விசாரணை

துப்பாக்கித் தோட்டாவுடன் விமானப் பயணம்: அமெரிக்கரிடம் விசாரணை

கோப்புப்படம்: ஊடகம்

25 Apr 2024 - 4:57 am

1 mins read

சென்னை: துப்பாக்கித் தோட்டாவுடன் பயணம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க பயணியை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

செவ்வாய்க்கிழமை அன்று, சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த விமானத்தில் அமெரிக்கரான ஆன்ட்ரு ஜெர்கட் என்ற பயணி பயணம் மேற்கொள்ள இருந்தார்.

இந்நிலையில், அவரது உடைமைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அவரது பெட்டியில் துப்பாக்கித் தோட்டா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

அப்பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்