100 பேரில் ஒருவருக்கு மாரடைப்பு ஆபத்து: ஆய்வில் தகவல்

100 பேரில் ஒருவருக்கு மாரடைப்பு ஆபத்து: ஆய்வில் தகவல்

1 mins read
66e58b81-7c1a-4aa5-8d94-0ed4b177ee6e
சித்திரிப்புப்படம். - படம்: ஊடகம்

திருச்சி: தமிழகத்தில் நூறு பேரில் ஒருவருக்கு மாரடைப்பு ஆபத்து இருப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 76 விழுக்காட்டினருக்கு மாரடைப்பு அல்லது மூளைப்பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிய வந்திருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஆய்வு முடிவுகளை விரிவாக வெளியிட்டுள்ளது. அண்மையில் திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த 1,260 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 60 விழுக்காட்டினருக்கு உடல் பருமன், இதய நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தி பேருக்கு உடலில் கொழுப்பு அளவு அதிகமாக இருந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் ஐந்தில் ஒருவருக்கு அடுத்த 10 வருடங்களில் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு அல்லது மூளைப்பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் (23 விழுக்காடு) இருப்பது கண்டறியப்பட்டது.

“இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 63 விழுக்காட்டினர் பெண்கள். அவர்களின் வயது 40 முதல் 44 வயதுவரை உள்ளது. பெண்களில் 60 விழுக்காட்டினர் இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியான உடல் பருமனுக்கு ஆளாகி உள்ளனர்,” என்று சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்