தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
bedb3ee8-7cf2-46d7-9103-a75faeb6996b
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வியாழக்கிழமை காலை சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக சென்னை வந்த விமானத்தில், ஒரு நபரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். பைக்குள் மறைத்து எடுத்த வந்த ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருளை யாரிடம் கொடுப்பதற்காக பயணி கடத்தி வந்தார்? பயணியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்