திருச்சி: திருவரங்கத்தின் அரங்கநாதசாமி கோவிலில் மே மாதம் 6ஆம் தேதி சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருவரங்கக் கோவில் சித்திரைத் தேரோட்டத்தை ஒட்டி மே 6ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மே 6ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக ஜூன் மாதம் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவரங்கக் கோயில் சித்திரைத் தேரோட்டத்தைக் காண புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.