மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்

மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்

1 mins read
183b6881-956a-4761-8b05-157fc415b734
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டை தூக்குகிறார். - படம்: தினத்தந்தி

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மூட்டை தூக்கும் காட்சி இணையத்தில் பரவலானது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் வேளாண்துறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அவர்.

தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக கூட இல்லாத நிலையில் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது நிலத்தில் பயிரிட்ட பொருள்களை டிராக்டர் மூலம் தனது வீட்டிற்குக் கொண்டுவந்தார். அப்போது டிராக்டரில் இருந்த மூட்டைகளை அவரே தலையில் சுமந்து இறக்கு வைத்தார்.

இதனை அவருடைய ஆதரவாளர் ஒருவர் காணொளியாக பதிவு செய்தார். அந்த நபர் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனை நோக்கி,” நாங்கள் தங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், நீங்கள் இதுபோன்ற வேலைகளைச் செய்கிறீர்கள்,” எனக் கேட்டார். அதற்கு அவர், “இந்த வேலைகள் செய்தால்தான் சாப்பாட்டிற்கு அரிசி கிடைக்கும்,” எனத் தெரிவித்தார்.

சமூகதளங்களில் பகிரப்பட்ட இந்தக் காணொளி தற்போது பரவலாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்