நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து: மே 13ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து: மே 13ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும்

படம்: ஊடகம்

28 Apr 2024 - 7:00 pm

1 mins read

நாகை: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி இந்தக் கப்பல் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், பயணக் கட்டணம் அதிகமாக இருந்ததால் பயணிகள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. குறைவான பயணிகளைக் கொண்டு நீண்டகாலம் இச்சேவையை வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

மேலும் புயல், கடும் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆறு மாதகாலமாக கப்பல் பயணச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 13ஆம் தேதி சிவகங்கை என்ற பெயர் கொண்ட மற்றொரு கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்கப்படுகிறது. ஏற்கெனவே இயக்கப்பட்ட செரியாபாணி என்ற கப்பலுக்கு மாற்றாக புதிய கப்பல் வந்துள்ளது.

இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும் மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளன. கீழ்தள இருக்கைக்கு 5,000 ரூபாயும் மேல்தள சிறப்பு வகுப்புக்கு 7,000 ரூபாயும் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்