தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடி பிரிவிடம் ஒப்படைப்பு

1 mins read
e5a88abb-897c-48b1-890c-daa5ee06d8e1
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, ரூ.4 கோடி ரொக்கத்தைக்கொண்டு சென்றதாக தாம்பரம் ரயில் நிலையத்தில் அப்பணத்தைப் பறிமுதல் செய்ததோடு அது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்று வாக்குமூலம் அளித்தனர்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு வரும்படி காவல்துறை இரண்டு முறை அழைப்பு விடுத்தது.

இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிலால் உத்தரவிட்டார். இவ்வழக்கில் தாம்பரம் காவல்துறையினர் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் காவல்துறையினர் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் 4 கைப்பேசிகளும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்