கனல்தெறிக்கும் வரிகளால் தமிழுணர்வு ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கனல்தெறிக்கும் வரிகளால் தமிழுணர்வு ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 mins read
6dfeb701-e17f-4250-9aba-6a376d791a12
பாவேந்தர் பாரதிதாசன். - கோப்புப் படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) கொண்டாடப்பட்டது.

இந்நாளைச் சிறப்பிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”

“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!”

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவரது பிறந்தநாளில் வீரவணக்கம்! எனத் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பிறந்தநாள்