வேலூர்: 2017ஆம் ஆண்டில் வேலூர் மாநகராட்சியில் ஆணையராகப் பணிபுரிந்த குமார், கொசுமருந்து தெளிக்கும் ஒப்பந்ததாரர் பாலாஜியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக 2017ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆணையர் குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் துணை ஆணையராகப் பணியாற்றிய நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் இந்த லஞ்ச வழக்கின் காரணமாக குமாரின் பணி ஓய்வு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

