மே 3ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்

மே 3ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்

1 mins read
f039fa77-d041-4fb4-8141-ab7f5a2c7b3e
தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் வெப்பநிலை 9 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 2, 3 ஆகிய தேதிகளில் வெப்பநிலை 9 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

மே 2, 3 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக மே 1, 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்