தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏடிஎம் கார்டு மோசடி: முன்னாள் வங்கி ஊழியருக்குச் சிறை

1 mins read
7479bb95-452c-4480-8f72-644e702158c0
ஸ்ரீவாசலு என்பரிடம் இருந்து 64 ஏடிஎம் அட்டைகள், கணினி, கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் சூளைமேட்டில் கார்த்திக் என்பவரது ஏடிஎம் அட்டை தொலைந்து போய்விட்டது. ஆனால், அவரது கணக்கில் ரூ.11,870 தொகையை மூன்று தவணைகளில் யாரோ ஒருவர் எடுத்தது குறித்த குறுந்தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர் அருகேயுள்ள காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் 27 வயது ஸ்ரீவாசலு என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் முன்னாள் வங்கி ஊழியர் என்பதும் தெரியவந்தது. அந்த ஆடவரிடம் இருந்து 64 ஏடிஎம் அட்டைகள், நான்கு கைப்பேசிகள், கையடக்கக் கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் கவனக்குறைவாக விட்டுச் செல்லும் ஏடிஎம் அட்டைகளை வைத்து ஸ்வைபிங் மெஷின்கள் மூலம் குறிப்பிட்ட ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்து இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஸ்ரீவாசலு ரெட்டி, விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்