தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் கோளாறு; சென்னை செல்லாமல் திரும்பிய விமானம்

1 mins read
ffd179ca-fea7-47e2-9d49-e42213c5f6e9
சென்னை விமான நிலையம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 184 பயணிகளுடன் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது விமானத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அந்த விமானம் புறப்பட்ட இடமான அகமதாபாத்துக்கே திரும்பியது.

தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரிசெய்ய முடியாததால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானம் சென்னை வந்துவிட்டு, காலை 8.45 மணிக்கு ஹைதராபாத் செல்லும்.

அந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் இரண்டு வருகை, இரண்டு புறப்பாட்டுச் சேவைகள் என நான்கு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்