மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தின் சாா்பில் ‘திகிரி-24’ என்ற இயல், இசை, நாடக நிகழ்வுகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

மருத்துவம் பயிலும் மாணவா்களை தமிழ் கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கெடுக்கவைக்கும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், பேராசிரியா்கள் என 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், எழுத்தாளா் இன்சுவை, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் ராமன், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கர நாராயணன், லயோலா கல்லூரி பேராசிரியா் டேவிட் ஸ்டான்லி உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனா்.

சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், தமிழ் மன்ற ஆலோசகா்கள் டாக்டா் ஜெயலட்சுமி, டாக்டா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனா். சங்க இலக்கியத்துடன் சமகால மருத்துவத்துக்கு உள்ள தொடா்புகள் குறித்தும், அதன் மேன்மைகள் குறித்தும் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

அதேபோன்று தமிழில் மருத்துவப் பாட நூல்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற தமிழ் மன்றங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் சிறப்பு விருந்தினா்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாநில அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!