திரைச்செய்தி

[ο]நூறு நாள்களைக் கடந்த வேட்டையன் படப்பிடிப்பு

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்தால் அது செய்தியாகும். ஆனால், ரஜினி நடிப்பில் உருவாகும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு 100 நாள்களைக் கடந்துள்ளதாம். இதையும் கொண்டாடுகிறார்கள்.

இப்படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு 100வது நாளை எட்டியதை அடுத்து, சமூக ஊடகத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார் ஞானவேல்.

தற்போது சென்னையில் மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு ரஜினியின் அறிமுகப் பாடல் காட்சியை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

[ο]திரிஷாவுக்கு முக்கியத்துவம் அளிக்கச் சொன்ன கதாநாயகன்

திரிஷா நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படத்திற்கு ‘ஐடென்டிடி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இது நேரடி மலையாளப் படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ள இப்படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நாயகனாவும் வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

“இது புலனாய்வு கலந்த திகில் படம். அண்மையில் ஈரோடு பகுதியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. திரிஷா மிக நேர்த்தியான நடிப்பால் படக்குழுவினரைக் கவர்ந்துவிட்டார்.

“அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி டோவினோ தாமஸ் கேட்டுக் கொண்டது படக்குழுவினரை நெகிழ வைத்தது. அனைவரது ஒத்துழைப்புடன் இப்படத்தை உரிய தேதியில் வெளியிட உள்ளோம்,” என்கிறார் இயக்குநர்.

[ο]விக்ரம் பட சுவரொட்டியால் சர்ச்சை

விக்ரம் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் சுவரொட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரமின் பிறந்தநாளையொட்டி இரண்டு சுவரொட்டிகளைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவற்றுள் ஒரு சுவரொட்டியில் கதாநாயகன் விக்ரம் இரண்டு கைகளிலும் இரண்டு அரிவாள்களை கையில் ஏந்தியபடி ஆவேசத்துடன் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இச்சுவரொட்டி வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற சுவரொட்டிகள் இளையர்களின் மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!