மதுரை: நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஐம்பது வயது ஆடவர் மதுரையில் அத்தேர்வை எழுதியுள்ளார்.
தாம் ஒரு வழக்கறிஞர் என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
மதுரை நாராயணபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சந்தானம் தேர்வு எழுதினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது பிறந்தநாளன்று தேர்வு எழுதுவது உற்சாகம் அளிப்பதாகக் கூறினார்.
தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.