ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கி வீட்டிற்குள் புகுந்த பேருந்து

ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கி வீட்டிற்குள் புகுந்த பேருந்து

படம்: ஊடகம்

06 May 2024 - 5:09 pm

1 mins read

ராமேசுவரம்: ஓட்டுநர் இல்லாதபோதும் பேருந்து தானாகவே இயங்கி, அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் ராமநாதபுர மாவட்டம், ராமேசுவரம் அரசுப் போக்குவரத்துப் பணிமனையின்கீழ் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து ஒன்றை அதன் ஓட்டுநர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, அருகிலிருந்த பணிமனைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்பேருந்தில் எந்த ஒரு வேகத்தடையும் செயல்படவில்லை எனக் கூறப்பட்டது.

இதனையடுத்து, அது தானாகவே இயங்கி, கிட்டத்தட்ட 50 மீட்டர்வரை சாலை ஓரத்தில் இறங்கி, அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

நல்ல வேளையாக, அவ்வீட்டினுள் இருந்த மூதாட்டி உயிர்தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டிற்குள் புகுந்த அரசுப் பேருந்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

பணியிலிருந்த ஓட்டுநர் பேருந்தை ‘கியரில்’ நிறுத்தி வைக்காததே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துதமிழ்நாடுபேருந்து