கொடைக்கானலில் அமலுக்கு வந்தது ‘இ-பாஸ்’; சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை முதல் இ-பாஸ் (மின்னியல் அனுமதி அட்டை) அமலுக்கு வந்தது. கியூஆர் குறியீடு மூலம் சோதனை செய்த பிறகே சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

கொடைக்கானலில் கோடை பருவத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற பருவ காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் ஜூன் 30 வரை கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான epass.tnega.org என்ற இணைய முகவரி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (மே 6) காலை 6 மணி முதல் கொடைக்கானல் செல்ல 
இ-பாஸ் பெறுவதற்கான பதிவுகள் தொடங்கின. சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். சுற்றுலாப் பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை புரிகிறார்கள், வாகனத்தில் எத்தனை நபர்கள் வருகிறார்கள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்த உடனே இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்களை கியூஆர் குறியீடு  மூலம் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அவர்களது கைப்பேசி வாயிலாகவும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களைச் சமர்ப்பித்து இ-பாஸ் பெறலாம். அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் இ-பாஸ் பெற வேண்டியதில்லை.

கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச் சாவடியில் கியூஆர் குறியீடு மூலம் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே நகருக்குள் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!