தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஆய்வு: சத்யபிரதா சாகு

1 mins read
1c69ec57-c404-4409-b29e-615e5093a961
சத்யபிரதா சாகு. - படம்: ஊடகம்

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதாக அரசியல் கட்சியினர் புகார் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளின் செயல்பாடு குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அம்மையங்களைச் சுற்றி மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சில வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பட்ட திடீர் மின்தடை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.சத்யபிரதா சாகு, மின்கசிவு, மின் இணைப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளால்தான் சில வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் சிறிது நேரம் செயல்படாமல் போயின என்றார்.

“இதுபோன்ற பிரச்சினைகள் மற்ற மக்களவைத் தொகுதிகளில் ஏற்படக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அனைத்து மையங்களிலும் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

“இனி மின்தடை இல்லாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” என்றார் திரு.சத்யபிரதா சாகு.

குறிப்புச் சொற்கள்