நாகப்பட்டினம்: அண்மையில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள பஞ்ச நதிக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான நிகில், நிர்மல் ஆகிய இருவரும் இம்முறை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியானதும் இருவரும் தலா 478 மதிப்பெண்களைப் பெற்றிருப்பது தெரிய வந்தது.
சகோதரர்கள் இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இவர்களுடைய தந்தை விவசாயி ஆவார்.