ஜெயகுமார் வழக்கு: மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது

ஜெயகுமார் வழக்கு: மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது

1 mins read
010b0181-9b1f-45ea-b4f4-9faebf042b7a
ஜெயகுமார் தனசிங். - படம்: ஊடகம்

மதுரை: காங்கிரஸ் கட்சியின் நெல்லைப் பகுதி நிர்வாகி ஜெயகுமார் தனசிங் அண்மையில் மாயமானார். பின்னர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உடல் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இதற்காக அவரது எலும்புகள், மதுரை மண்டல தடைய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மரபணு அறிக்கை கிடைத்த பிறகு ஜெயகுமாரின் மகன், மனைவியின் மரபணுக்களும் ஒப்பீடு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
மாயம்