தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு விரைவுப் பேருந்துகளில் மின்னணு கட்டண முறை

1 mins read
8b1310e2-f4f2-4252-b861-8ea10a234719
அரசு விரைவுப் பேருந்துகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி.  - கோப்புப் படம்

சென்னை: மே முதல் தேதியிலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு விரைவுப் பேருந்துகளிலும் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

1000 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளிலும் மின்னணு கட்டண இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனி நுழைவுச்சீட்டு எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்கத் தேவையில்லை. வங்கி அட்டைகள், ஜி-பே, கைப்பேசி பே போன்றவற்றின் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி.) மூலம் தினமும் 1,000 பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

இந்த விரைவுப் பேருந்துகளுக்கு இணையத்தளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இவற்றில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்