தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே பாணியில் கொல்லப்பட்ட ராமஜெயம், ஜெயக்குமார்; விசாரணையைத் தீவிரப்படுத்தும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள்

1 mins read
bf2228a6-b858-4adc-b166-e443fb17375a
(இடமிருந்து) ஜெயக்குமார், ராமஜெயம். - படம்: ஊடகம்

நெல்லை: அண்மையில் நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட விதமும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொல்லப்பட்ட விதமும் ஒரே மாதிரி இருப்பதாக காவல்துறை கருதுகிறது.

இந்நிலையில், இந்தக் கோணத்திலும் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராமஜெயம் கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. ராமஜெயம் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.

2012ஆம் ஆண்டு காலையில் நடைபயிற்சிக்கு சென்ற போது அவர் கடத்தப்பட்டார். ராமஜெயத்தின் வாயில் துணியை வைத்து அடைத்து, கை, கால்கள் கட்டப்பட்டன. அதன் பின்னர் தீ வைத்து அவரை எரிக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில், இதே பாணியைப் பின்பற்றி ஜெயக்குமார் வாயில் இரும்பு நார் வைக்கப்பட்டு கை, கால்களைக் கட்டியுள்ளனர் கொலைகாரர்கள். அதன் பிறகே ஜெயக்குமார் கொல்லப்பட்டுள்ளார்.

எனவே இரு கொலைகளையும் ஒரே கூலிப்படை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராமஜெயம் வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

எனவே ஜெயக்குமார் கொலையில் நல்ல ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், ராமஜெயம் கொலை வழக்கிலும் மர்மம் விலகும் என காவல்துறை எதிர்பார்க்கிறது.

இவ்விரு வழக்குகளையும் தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் விசாரித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்