சென்னை: அட்சய திருதியை நாளையொட்டி தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன.
நடப்பாண்டில் அட்சய திருதியை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை நண்பகல் 2.50 மணிக்கு முடிவடைந்தது.
இதையடுத்து இரு நாள்களும் நகைக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது.
வெள்ளிக்கிழமை அன்று நகை விற்பனை களைகட்டிய போதும், நேரமின்மையால் பலர் நகைகளைப் பொறுமையாகத் தேர்வு செய்து வாங்க முடியாமல் போனது. இதனால் சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
சில நகைக்கடைகளில் தொடர்ந்து நகை வாங்குவோர் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்து நகைக்குரிய 75% தொகையைச் செலுத்தி உள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைகள் விற்றுத் தீர்ந்தன.
சனிக்கிழமை அன்றும் அட்சய திருதியை தொடரும் எனத் தெரிய வந்ததால் மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். எனவே மொத்த விற்பனை அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

