திருப்பூர் அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 9 பேர் கைது

திருப்பூர் அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 9 பேர் கைது

1 mins read
bd2bb184-c779-4c41-923a-99e8bbaf0224
பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோவில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரில் 3 சிறார்கள் உள்பட 9 பேரை காவல்துறை கைது செய்தது.

சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்ததை அடுத்து உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை விசாரணையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

ந்தப் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட 3 சிறுவர்களின் வயதுகள் முறையே 14, 15 மற்றும் 16 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்