சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளையரை மூவர் கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இளையரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது.
தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டே பகுதி நேரத்தில் ஆட்டோ ஓட்டி வந்த உதயகுமார், தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் பெண் தோழியுடன் சென்றுகொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உள்பட மூவர் சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். முன்விரோதம் காரணமாக செய்யப்பட்ட கொலை என முதற்கட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.