நெல்லை: அரசு விரைவுப் பேருந்து ஒன்றில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு வரப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சென்னையில் இருந்து திருநெல்வேலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பேருந்தில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள், பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் அந்தப் பேருந்தில் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

