4 மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி

4 மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி

1 mins read
b42a48a0-bb91-4ae7-9ea0-5b8d82f121c6
சென்னை-திருச்சி விரைவுச்சாலை. - படம்: இணையம்

சென்னை: சென்னை - திருச்சி விரைவுச்சாலை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது எட்டுச் வழிச் சாலையாக அமைக்கப்படும். இந்தச் சாலை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை - திருச்சி இடையிலான பயண நேரம் 4 மணி நேரமாக குறைந்துவிடும். சென்னை – சேலம் விரைவுச்சாலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அமைக்கப்படும் இரண்டாவது விரைவுச்சாலையாக இந்தச் சாலை இருக்கும்.

இந்தத் திட்டத்திற்கு சுமார் 35,000 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை- திருச்சி விரைவுச்சாலை 310 கி.மீ நீளமும், பிள்ளையார்பட்டி- தூத்துக்குடி வழித்தடம் 160 கி.மீ நீளமும் இருக்கும். இதை சேர்த்து மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தென் மாவட்டங்கள் வரை நீட்டிக்கும் வகையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை ஓர் இணைப்பு சாலையை ஏற்படுத்தி, அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி வழியாக தூத்துக்குடி வரை இந்தச் சாலை நீட்டிக்கப்படும். இதில் தஞ்சாவூர் முதல் தூத்துக்குடி வரை 4 வழிச் சாலையாக அமைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்