புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரைக்குச் செல்லத் தடை விதிப்பு

புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரைக்குச் செல்லத் தடை விதிப்பு

1 mins read
2fe402b5-78ce-4909-b92c-7ca41024f3bb
புதுச்சேரியில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. - படம்: தமிழ்.இந்து

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்து வருகிறது. அங்கு சில நாள்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதையடுத்து கடற்கரையில் கூடும் மக்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறை என்பதால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடல் சீற்றம் காரணமாகவும் கனமழை எச்சரிக்கை காரணமாகவும், கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் காவல்துறை தடைவிதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்