சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையால் ‘பெண் கல்வி, உரிமைகள், விடுதலை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது.
இப்பாடல் உருவாக்கத்தில் மறைந்த பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் இசைப் பங்களிப்புக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்துள்ளார். பவதாரிணியின் தந்தையும் இசையமைப்பாளருமான இளையராஜாவை தாம் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அந்தப் பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணியின் இசைப் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பவதாரிணியின் இசையில் உருவான பாடலின் காணொளியையும் தமது பதிவில் அமைச்சர் அன்பில் மகேஸ் இணைத்துள்ளார்.
இசையமைப்பாளர் பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி இலங்கையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.