விஜய்யுடன் கூட்டணிக்குத் தயார்: சீமான்

1 mins read
d3388f76-e6f3-420d-9a33-1e1fcb63d218
விஜய், சீமான். - படம்: ஊடகம்

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் தாம் அங்கு செல்வது உறுதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானும் விஜய்யும் நேரடியாகச் சந்திப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது விஜய்யுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளேன். விஜய் பாணியில் சொல்வது என்றால், நான் காத்திருக்கிறேன் (ஐ ஏம் வெயிட்டிங்),” என்றார் சீமான்.

“நாங்கள் இருவரும் ரகசியமாகச் சந்தித்ததாக கூறுகிறார்கள். அவ்வாறு சந்திக்க நாங்கள் என்ன கள்ளக் காதலர்களா?

“நான் அண்ணன், அவர் தம்பி. அண்ணனும் தம்பியும் சந்திப்பதில் என்ன ரகசியம் இருக்கிறது. அவர் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளில் இருக்கிறார். விரைவில் சந்திப்போம்,” என்றார் சீமான்.

அரசியல் கட்சி தொடங்கி உள்ள விஜய் அண்மையில் சீமானை சந்தித்துப் பேசிய தாக ஒரு தகவல் வெளியா னது. இதையடுத்து இரு தரப்பும் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட் டணி அமைக்க வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்