சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு நிலவுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சியில் ஒரு தரப்பினர் மீண்டும் வலியுறுத்த தொடங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் உதயகுமார், ஓபிஎஸ் தரப்பைக் கடுமையாக சாடியுள்ளார்.
முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் சாதிப்பார் என்றும் அவரது தலைமையில் அதிமுக வரலாறு காணாத பின்னடவைச் சந்தித்தது என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.
“ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க திரைமறைவில் ரகசிய முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.
“ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன,“ என்றார் உதயகுமார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருப்பதாகக் கூறப்பட்ட செல்வாக்கு இப்போது அறவே இல்லை என்று குறிப்பிட்ட உதயகுமார், ஓபிஎஸ் தரப்பால் மக்களவைத் தேர்தலில் அவரது சொந்த மாவட்டமான தேனியில்கூட சாதிக்க முடியவில்லை என்றார்.
“கடந்த காலங்களில் திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைக் கூறியுள்ளார் பன்னீர்செல்வம். அவர் இவ்வாறு பேசுவதை அதிமுக தொண்டர்களால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
தொடர்புடைய செய்திகள்
“கட்சி அலுவலகத்தையே உடைத்து கபளிகரம் செய்தவர் அவர். அதிமுகவை அழிக்க முயற்சி மேற்கொண்டார். எனினும், உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட அதிமுகவை அவரால் எக்காலத்திலும் அழிக்க இயலாது,” என்றார் உதயகுமார்.