பட்டாசு கிடங்கில் விபத்து; ஒருவர் மரணம்

பட்டாசு கிடங்கில் விபத்து; ஒருவர் மரணம்

1 mins read
b4b4a8fd-1b0c-4d94-9291-b97e30895516
மின்கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.

இச்சம்பவம் விராலிமலை அருகே உள்ள அத்திப்பள்ளம் என்ற இடத்தில் மே 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடந்ததாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பட்டாசு கிடங்கில் 2 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெடிச் சம்பவத்தில் கார்த்திக் என்னும் 27 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

சம்பவம் நடந்த பட்டாசு கிடங்கு அரசு உரிமம் பெற்றுதான் செயல்பட்டு வந்ததாகவும், மின்கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்