சென்னை: விரைவில் பிறக்கப் போகும் தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட பிரபல யூடியூபரான இர்ஃபானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள இர்ஃபான் அண்மையில் வெளிநாடு சென்றிருந்தார். அங்கு இவரது மனைவிக்கு நடத்தப்பட்ட சோதனையில் குழந்தையின் பாலினம் தெரிய வந்தது.
இதையடுத்து அத்தகவலை பலருடன் பகிர்ந்து கொண்டார் இர்பான். பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து அவ்விவரத்தை தமிழ்நாட்டில் வந்து வெளியிட்டுள்ளார் இர்ஃபான்.
இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

