விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவில் சோதனை

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவில் சோதனை

1 mins read
c2f285ba-3b4c-4049-a22d-8c143171b286
விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவில் சோதனை நடைபெற்றது. - படம்: ஊடகம்

விழுப்புரம்: சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை காரணமாக விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த அலுவலகத்தில் இருந்து 1.80 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

இக்குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் அளிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் அதிகாரிகள் திடீர் என அங்கு வந்து சேர்ந்தனர்.

சோதனையை அடுத்து பெண் சார்பதிவாளர் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்ததாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்