நுரையீரலில் சிக்கிய ஊசி; கத்தியின்றி, ரத்தமின்றி மூன்றரை நிமிடங்களில் அகற்றிய மருத்துவர்கள்

நுரையீரலில் சிக்கிய ஊசி; கத்தியின்றி, ரத்தமின்றி மூன்றரை நிமிடங்களில் அகற்றிய மருத்துவர்கள்

1 mins read
816f8781-91bf-4fd4-a9a6-272541105d2f
நுரையீரலில் சிக்கிய ஊசி. - படம்: ஊடகம்

கும்பகோணம்: ஊசியைத் தவறாக விழுங்கிய சிறுமியின் நுரையீரல் பகுதியில் இருந்து நவீன சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது.

மொத்தம் மூன்றரை நிமிடங்களில் அந்த ஊசி வெற்றிகரமாக அகற்றப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, வாயில் நான்கு சென்டி மீட்டர் நீளமுள்ள சிறு ஊசியை வைத்தபடி உடை மாற்றும்போது, தவறுதலாக ஊசியை விழுங்கிவிட்டார். அது சிறுமியின் நுரையீரல் பகுதியில் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, அச்சிறுமியை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் கத்தியின்றி, ரத்தமின்றி ஊசியை அகற்றிவிட முடியும் எனப் பெற்றோருக்கு நம்பிக்கை அளித்தனர்.

இதற்காக, ‘பிரோன்கோஸ்கோப்பி’ (Bronchoscopy) என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, மூன்றரை நிமிடங்களில் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த ஊசி அகற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்