ராமநாதபுரம்: வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 24 கிலோ கடல் அட்டைகளை ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அங்குள்ள தேவிபட்டினத்தில் கடற்கரைப்பகுதியில் அந்த கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று அவற்றைப் பறிமுதல் செய்ததுடன், 40 வயதான ஆடவர் ஒருவரையும் கைது செய்தனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில், மருத்துவ குணமுள்ள அரிய வகை கடல் அட்டைகள் இருப்பதாகக் கருதும் வெளிநாட்டவர்கள் சிலர், அவற்றை வாங்குகின்றனர்.
இதனால் கடல் அட்டைகளைக் கடத்துவது அதிகரித்துள்ளது.

