சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என நம்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இண்டியா கூட்டணி மூலம் மாற்று ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது என்றார்.
“பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என இந்திய மக்கள் ஆவேசத்துடன் முடிவு செய்துள்ளனர். எனினும் தேர்தல் ஆணையம் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? எனும் கேள்வி எழுந்துள்ளது,” என்றார் டி.ராஜா.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகிக்க தொடங்கியுள்ளனர் என்றும் அவர் சாடினார்.
“இண்டியா கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடி அச்சப்படுகிறார். அதனால், அந்நிய நாடுகளுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்.
“நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியா உள்ளது,” என்று டி.ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

