நீலகிரி: 26 அடி உள்ள கிணற்றில் விழுந்த குட்டியானையை மீட்க எட்டு மணிநேரம் ஆனது.
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர்ப் பகுதியில், சில யானைகள் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக உலவிக்கொண்டிருந்தன.
அப்போது ஒரு குட்டியானை அங்கிருந்த கிணற்றில் விழுந்துவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், விரைந்து சென்று குட்டியை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு குட்டியானையை மீட்க முயற்சி செய்தனர். எனினும், மூன்று மணிநேரப் போராட்டம் வீணானது.
பின்னர் அளவில் பெரிய பொக்லைன் இயந்திரத்தின் மூலம், குட்டியானை தவறி விழுந்த கிணற்றைச் சுற்றி பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.
அதன் முடிவில், சுமார் எட்டு மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு, குட்டியானை பத்திரமாக மீட்கப்பட்டு அதன் தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டது.


