சென்னை: ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் பாஜக நெல்லை மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் பிரிவு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, அவருக்கு உரிய அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட மேலும் மூவர் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஏற்று நால்வரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் விசாரணைக்கு முன்னிலையாவர் எனத் தெரிகிறது.

