2.56 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூ.72,000 கோடி கடன்: அரசு தகவல்

2.56 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூ.72,000 கோடி கடன்: அரசு தகவல்

படம்: ஊடகம்

29 May 2024 - 10:17 pm

1 mins read

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இதுவரை ரூ.71,906.43 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2,56,508 மகளிர் குழுவினர் இதனால் பயனடைந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழக ஊரகப் பகுதிகளில் உள்ள 6,40,313 சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு 58,746 சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“நகர்ப்புறங்களில் செயல்படும் 1,29,630 சுய உதவிக் குழுக்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.5,266.21 கோடி வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது,” என தமிழக அரசின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்