சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான ஊழல் வழக்கை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிஐ-யின் சிறப்பு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை நாடாளுமன்ற, சட்டமன்ற வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்து, விசாரணையை வரும் ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.