சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழ் நாட்டில் வாக்குகள் எண்ணப்படுவதைக் கண்காணிப்பதற்காக 39 தொகுதிகளுக்கு 57 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப் பதிவில், தமிழகத்தில் முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் முடிவுற்றது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், அடுத்ததாக இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.
இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்குமான வாக்குகள் எண்ணப்படுவதைக் கண்காணிக்க 57 பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

