சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை சோதனை செய்வது வழக்கம். சாலையில் செல்லும் வகையில் பள்ளி வாகனம் தகுதியானதாக உள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
இவ்வாண்டுக்கான சோதனை பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சென்னையில் உள்ள 4,624 பள்ளிவாகனங்களில் 3,243 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 409 வாகனங்கள் தகுதியற்றவை என்று அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்,
அதனால் அவற்றுக்கு தற்காலிகமாக தகுதிச் சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, பள்ளி வாகனங்களில் அவசரகால கதவு, சன்னல்கள், படிகள் உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளோம், குறைபாடுகள் உள்ள 400-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தற்காலிகமாக தகுதிச்சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை சரி செய்த பிறகே வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று ஆய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

