தஞ்சாவூர்: ‘ஈஷா’ சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இவ்வாண்டு 400,000க்கும் மேற்பட்ட மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (மே 30) நடைபெற்ற அதன் தொடக்க விழாவில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் அந்நிகழ்வை தொடங்கி வைத்தார். ஈஷா மூலம் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தொடக்க விழா அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை சிறப்போடு செய்திருக்கிற ஈஷா மையத்திற்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று நீலமேகம் தெரிவித்தார்.

